SELANGOR

எஸ்பிஆர்எம் நடவடிக்கைகளில் நம்பகத்தன்மையில்லை

ஷா ஆலம், டிசம்பர் 8:

சிலாங்கூரில் அன்மையில் ஒருவரை தடுத்து வைத்து விசாரணை செய்த மலேசிய லஞ்சம் மற்றும் ஊழல் ஆணையத்தின் நடவடிக்கை நேர்மையானதும் நம்பகத்தன்மையையும் கொண்டிருக்கவில்லை என்று ஹிஸ்பா செண்ட்ர் போஃர் ர்போர்ஃம் என சொல்லப்படும் ஹிஸ்பாவின் தலைமை இயக்குநர் டத்தோ முகமாட் ஏசான் முகமட் நோர் தெரிவித்தார்.

அவர்களின் அத்தகைய செயல்பாடு சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலிக்கு எதிரான அரசியல் நோக்கமுடையதே என்றும் அவர் கூறினார்.தொடர்ந்து டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் ஒவ்வொரு அரசியல் சூழ்ச்சியும் அது சார்ந்த நடவடிக்கைகளும் அவரது வெளிப்படையான மற்றும் விவேகமான அரசியல் பயணத்தை தடுக்கும் முயற்சியாக அமைந்தாலும் அதனை உடைத்தெறிந்து சிலாங்கூர் மந்திரி பெசார் தொடர்ந்து வெற்றி நடைப்போடுவதாகவும் அவர் கூறினார்.

சிலாங்கூர் மந்திரி பெசார் சிலாங்கூரில் மட்டுமின்றி நாட்டில் பல்வேறு மாநிலங்களிலும் அனைத்துலக நிலையிலும் பிரபலமானவராகவும் அவரது தலைமைத்துவம் சிறந்ததாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளதால் அவருக்கு எதிரான நடவடிக்கைகளும் இருக்கதான் செய்கிறது.அன்மையில் வடக்கிலும் தெற்கிலும் மேற்கொள்ளப்பட்ட பெடுலி சிஹாட் பரிவு மிக்க திட்டத்திற்கு பெரும் வரவேற்ப்பு கிடைத்ததையும் அவர் சுட்டிக்காண்பித்தார்.

டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலியின் செல்வாக்கு தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவதால் நாட்டில் பிரபலமானவர்களின் செல்வாக்கு தொடர்ந்து சரிந்தும் வருகிறது.டத்தோஸ்ரீ அஸ்மின் அலியின் வெளிப்படையான அனுகுமுறையும் விவேகமான பார்வையும் மட்டுமின்றி அவரது திறன் மிக்க நிர்வாகத்திறனும் அவரது இத்தகைய நிலைப்பாட்டிற்கு மூலதன்ம் என்பது குறிப்பிடத்தக்கது.

நடப்பில் இருப்பது போலவும் இன்னும் அதீத மேம்பாடுகளுடன் சிலாங்கூர் மாநிலம் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலியின் தலைமத்துவத்தில் முன்னேறி செல்ல வேண்டும்.தீயவர்களின் கண் பார்வை எப்போதும் சிலாங்கூர் மீது இருப்பதால் அவர்களை வேரறுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.சிலாங்கூர் மீது பல்வேறு அவதூறுகள் அள்ளித்தெளித்தாலும் மக்கள் விவேகமாய் சிந்தித்து டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி மற்றும் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் கரத்தை தொடர்ந்து மேம்படுத்துவார்கள் என்பதில் துளியும் ஐயமில்லை.

#தமிழ் அரசன்


Pengarang :