NATIONAL

கெஅடிலான் ஆதரவாளர்கள், சிகாமாட் தொகுதிக்கு மாற்றப்பட்ட வாக்காளர்களில் தொடர்பில் வழக்கு தொடர்ந்தனர்

சிகாமாட், டிசம்பர் 22:

நேற்று சிகாமாட்டை சேர்ந்த ஆறு மக்கள் நீதிக்கட்சியின் ஆதரவாளர்கள் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் ஜோகூர் எஸ்பிஆர் மற்றும் ஷாபியி தாயிப் ஆகிய பிரதிவாதிகள் மீது வழக்கு பதிவு செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. அதிலும் ஷாபியி தாயிப் எஸ்பிஆர் புகார்களை விசாரிக்கும் அதிகாரி ஆவார். சிவராசா ராசய்யா ஆறு கெஅடிலான் கட்சியின் ஆதரவாளர்கள் சார்பில் ஆஜரானார். சிகாமாட் ராணுவ முகாமிற்கு வாக்காளர்களை மாற்றம் செய்த மலேசிய தேர்தல் ஆணையம் மீது வழக்கு பதிவு செய்தது.

இந்த ஆறு மனுதாரர்கள், ஏற்கனவே மலேசிய தேர்தல் ஆணையம் 1051 ராணுவ அதிகாரிகளை சிகாமாட் நாடாளுமன்ற தொகுதிக்கு வாக்காளர்களாக சேர்ப்பது தவறான நடவடிக்கை என்று ஐம்பது ஆட்சேபனை செய்தவர்களில் முக்கியமானவர்கள் ஆவர். கடந்த டிசம்பர் 6-இல் நடைபெற்ற புகார் மீதான விசாரணை தொடர்பாக பல்வேறு சர்ச்சைக்குரிய நடவடிக்கையாக இது அமைகிறது. அதுவும் இன்னும் கட்டப்படாத ராணுவ முகாமில் எப்படி வாக்காளர்களை சேர்க்க முடியும் என்பது ஆட்சேபனை செய்யப்பட்டது.

மஇகாவின் தேசிய தலைவர் மற்றும் சுகாதார அமைச்சரான டத்தோ ஸ்ரீ சுப்பிரமணியம் போட்டியிடும் தொகுதியான சிகாமாட் நாடாளுமன்றம் 14-வது பொதுத் தேர்தலில் மிகவும் நெருக்கடியான தொகுதியாக தேசிய முன்னணிக்கு அமையும் என்று எதிர் பார்க்கப்படுகிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

 

டத்தோ ஸ்ரீ எட்மண்ட் சந்தாரா

சிகாமாட் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் 

தேசிய ஒருமைப்பாடு பிரிவு தலைவர்

மக்கள் நீதிக்கட்சி

 


Pengarang :