NATIONAL

தேசிய முன்னணி 2/3 பெரும்பான்மையில் வென்றால் மலேசியாவின் நிலை என்ன?

ஷா ஆலம்,ஜனவரி 25:தேசிய முன்னணி தொடர்ந்து ஆளுமை செலுத்தவும் மேலும் அதிகமான தொகுதிகளை அது வெல்லவும் வாய்ப்பு அளிக்கும் வகையில் எல்லை சீரமைப்பினை தேர்தல் ஆணையம் மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.

மேற்கொள்ளப்படும் எல்லை சீரமைப்பு அம்னோ தேசிய முன்னணி தொடர்ந்து ஆட்சியில் அமர வழி செய்யும் என்றும் பினாங்கு சமூக இன்ஸ்திதுட் மற்றும் தலைமை அரசியல் ஆய்வாளர்
வோங் சின் வூஹாட் குறிப்பிட்டார்.

இறுப்பினும்,இம்முறை 2/3 பெரும்பான்மை இல்லாததால் கூடுதல் தொகுதியினை அறிவிக்க முடியாது.ஆனால்,14வது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி 2/3 பெரும்பான்மையைப்பெற்றால் நஜிப் மேலும் அதிகமான நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தொகுதிகளை உருவாக்ககூடும் என்றார்.

எல்லை சீரமைப்பு நிச்சயம் நிகழும்.ஆனால்,அதனை எதிர்கொள்வதற்கு நமக்கு போதுமான ஆள்பலம் இருக்கா எனவுன் கேள்வி எழுப்பிய அவர் தேர்தலில் நாம் வாக்களிக்க தவறினால் நாம் தேர்தல் ஆணையத்திற்கு நேரடியாக உதவுவதோடு மட்டுமின்றி மிக மோசமான எல்லை உருவாக்கங்களுக்கு அது வழிகோலும் என எச்சரித்தார்.

எல்லை மறுசீரமைப்பு தேசிய முன்னணி நாட்டின் 14வது பொதுத் தேர்தலில் அதிகமான தொகுதிகளை வெல்ல வழிகோலுவதோடு அஃது 2/3 பெரும்பான்மைக்கும் சாத்தியமாக்கும் என்றார்.

தொடர்ந்து கூறிய அவர் நாட்டின் 14வது பொதுத் தேர்தலில் வாக்களிக்காமல் புறக்கணிப்பது தேசிய முன்னணியை அடுத்த ஐந்தாண்டு மட்டுமின்றி நீண்டதொரு காலத்திற்கு அதன் ஆளுமைக்கு வித்திடும் என அவர் எச்சரித்தார்.

இம்முறை
ஆணையத்தின் பல்வேறு நடவடிக்கைகளை நீதிமன்றத்தின் மூலம் நாம் தடுத்துள்ளோம்.ஆனால்,நாம் விவேகமாய் செயல்படாவிட்டால் எல்லாவற்றையும் இழந்து அவர்களை எதிர்த்துக்கூட போராட முடியாமல் வீழ்ந்திடுவோம் என்றும் நினைவுறுத்தினார்.


Pengarang :