NATIONAL

பெர்சே:பதிவு செய்யாத மலேசியர்களும் வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டும்

புத்ரா ஜெயா, ஏப்ரல் 24:

இன்னும் வாக்காளர்களாக பதிவு செய்யாமல் இருக்கும் பொது மக்கள் மலேசிய தேர்தல் ஆணையத்திடம்  (எஸ்பிஆர்) தங்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது தொடர்பில் சரிபார்க்க வேண்டும் என்று நீதி மற்றும் நேர்மையான தேர்தல் கூட்டமைப்பு  (பெர்சே 2.0) மலேசிய மக்களை கேட்டுக் கொண்டுள்ளது. பெர்சே இயக்கத்தின் இடைக்கால தலைவர் ஷாருல் அமான் முகமட் ஷாரி கூறுகையில் அண்மையில் பொது மக்களிடம் இருந்து 24 புகார்களை பெற்றுள்ளதாக தெரிவித்தார். இன்னும் பதிவு செய்யாத வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது ஆச்சரியமாக இருக்கிறது என்று அவர் விவரித்தார்.

” இன்னும் வாக்காளர்களாக பதிவு செய்யாமல் இருக்கும் 21 வயதுக்கு மேல் உள்ளவர்கள் எஸ்பிஆரிடம் தங்களின் பெயர்கள் உள்ளனவா என்று சரிபார்க்க வேண்டும். இல்லை என்றால் எதிர் வரும் 14-வது பொதுத் தேர்தலில் சில பொறுப்பற்ற  நபர்களால் வாக்குகள் தவறான முறையில் பயன்படுத்தப்படும். தற்போது குறைந்த நபர்கள் மட்டுமே புகார் செய்திருக்கிறார்கள். பெர்சே 2.0 இயக்கத்தினர், இன்னும் அதிகமான பொது மக்கள் இந்த செய்தியை அறியாமல் இருப்பார்கள் என்று கருதுகிறது,” என்று மலேசிய தேர்தல் ஆணையத்தின் தலைமையகத்தில் புகார்களை சமர்ப்பித்த பிறகு செய்தியாளர்களிடம் ஷாருல் இவ்வாறு பேசினார்.


Pengarang :