SHAH ALAM 07 JANUARI 2018. Pengerusi Parti Pakatan Harapan, Tun Dr Mahathir Mohamad pada sidang media Konvensyen Pakatan Harapan 2018 di IDCC . NSTP/ HAFIZ SOHAIMI
NATIONAL

விரைவில் புதிய அமைச்சரவை – துன் மகாதீர்!!

ஷா ஆலாம்,மே14:

பத்து பேர் அடங்கிய புதிய அமைச்சரவை இவ்வாரத்தில் அமைக்கப்படும் என பிரதமர் துன் மகாதீர் தெரிவித்தார்.

ஒவ்வொரு கட்சியும் பெயர்களையும் பொறுப்புகளை சமர்ப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டிருக்கும் நிலையில் புதிய அமைச்சரவை அமைக்க கால அவகாசம் தேவைப்படுவதாகவும் மேலும் கூறினார்.

இதற்கு முன்னர் மூன்று முக்கிய அமைச்சர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் எழுவர் விரைவில் அறிவிக்கப்படும்.ஒவ்வொரு கட்சியிலிருந்து மூவரின் பெயரை பரிந்துரைப்பதோடு விருப்பமான அமைச்சையும் அவர் சமர்பிப்பார்கள்.அதிலிருந்து நன்கு ஆராய்ந்த பின்னர் தேர்வுகள் செய்யப்படும் என்றார்.

பத்து பேர் அடங்கிய அமைச்சரவை இவ்வாரம் அமைக்கப்படும் நிலையில் மேலும் சில அமைச்சர்களும் நியமனம் செய்யப்படுவார்கள்.அஃது 25 பேராக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

இதற்கு முன்னதாக பிரதமராக பதவி ஏற்ற துன் மகாதீர் டத்தோஸ்ரீ வான் அசிஸாவை துணைப்பிரதமராகவும் லிம் குவான் எங்கை நிதி அமைச்சராகவும் உள்துறை அமைச்சராக டான்ஸ்ரீ முகிடின் யாசின் மற்றும் தற்காப்பு அமைச்சராக முகமாட் சாபுவையும் நியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைக்கப்படும் அமைச்சரவையிலும் மந்திரி சபையிலும் எந்தவொரு கட்சியும் ஓராங்கட்டப்படாது.மிக தெளிவாக ஆராய்ந்து கலந்தாலோசித்தும் முறையான மற்றும் விவேகமான முடிவுகளும் நியமனங்களும் மேற்கொள்ளப்படும் எனவும் பிரதமர் கூறினார்.

மேலும்,சபா மற்றும் சரவாக் மாநிலங்களிலிருந்து நல்ல வரவேற்ப்பும் ஒத்துழைப்பும் இருக்குமானால் புதிய அமைச்சரவையில் அவர்களின் பிரதிநிதிகளும் இடம் பெறுவர் என்றும் கூறிய துன் மகாதீர் புதிதாக அமைக்கப்படும் அமைச்சரவையில் 25 பேர் அடங்குவர் என்றும் கோடிக்காட்டினார்.


Pengarang :