NATIONAL

கிரேப் கார் ஓட்டுனரின் மரணத்தை உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் !!!

ஷா ஆலாம், ஜூன் 25:

நேற்று கிரேப் கார் ஓட்டுனரின்  கொலையுண்ட உடல் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டும் என்று வீடமைப்பு மற்றும் நகர நல்வாழ்வு ஆட்சிக் குழு உறுப்பினர்  ஹானிஸா தால்ஹா வேண்டுகோள் விடுத்தார். ஒரு உயிரை எடுக்க யாருக்கும் உரிமையில்லை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

”  பொது மக்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது அரசாங்கத்தின் கடமை ஆகும். அப்போதுதான் பொது மக்கள் தங்களின் அன்றாட வாழ்வில் பயமின்றி வெளியே போக முடியும்,” என்று ஹானிஸா தால்ஹா தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். கொலையுண்ட அய்மான் நோஸ்ரியின் (வயது 27) குடும்பத்தினருக்கு வருத்தத்தை தெரிவித்துக் கொண்டார்.

 

 

 

 

 

 

 


Pengarang :