SELANGOR

ஹிஜ்ரா 2019-இல் 3 புதிய திட்டங்களை அறிமுகப்படுத்த உள்ளது

ஷா ஆலம், டிசம்பர் 26:

சிலாங்கூர் ஹிஜ்ரா சிறு கடனுதவி திட்டம் (ஹிஜ்ரா) அடுத்த ஆண்டில் மூன்று புதிய கடனுதவி திட்டங்களை செயல்படுத்த உள்ளது என அதன் தலைமை செயல் அதிகாரி ரோஸ்லிம் முகமட் ஆகிர் தெரிவித்தார். இதில் பெருநாள் கால கடனுதவி, ‘இன்குபேடர்’ மற்றும் விவேக பங்காளிகள் ஆகியவை அடங்கும் என்றார்.

” ஹிஜ்ரா, பெருநாள் காலங்களில் வியாபாரம் செய்ய காத்திருக்கும் தொழில் முனைவர்களுக்கு ரிம 1000-இல் இருந்து ரிம 5000 வரை கடன் தொகை வழங்கப்படும். வியாபாரிகள் இடமிருந்து எங்களுக்கு பல கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன. இந்த கடனுதவி மூலம்  கூடுதல் முதலீடு செய்து வருமானத்தை பெருக்க முடியும். மூன்று மாதங்களில் இருந்து ஆறு மாதங்களுக்குள் கடனை திருப்பி செலுத்த வேண்டும், ” என்று சிலாங்கூர் இன்றுக்கு ரோஸ்லிம் விவரித்தார்.

இதனிடையே, இன்குபேடர் திட்டத்தின் கீழ் ஹிஜ்ரா புதிய தொழில் முனைவர்களை நிறுவனங்களின் உதவியோடு பயிற்சிகள் அளிக்கப்பட்டு திறன்மிக்க வணிகர்களை உருவாக்க முடியும் என குறிப்பிட்டார்.

மேலும், மாநில அரசாங்கத்தின் கூடுதல் ஒதுக்கீடான ரிம 25 மில்லியன் ‘ஸீரோ 2 ஹீரோ’ திட்டத்தை வலுப்பெற பயன்படுத்த படும் என்றார்.

2018-இன் மூன்றாம் கால் ஆண்டு வரை ஹிஜ்ரா 54,609 தொழில் முனைவர்களுக்கு கடனுதவி வழங்கி உள்ளது எனவும் இதில் கடன் தொகையாக ரிம 405.47 மில்லியன் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது என விளக்கம் அளித்தார்.


Pengarang :