NATIONAL

பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் நேர்மறையான அறிகுறிகள்

ஷா ஆலம், டிசம்பர் 31:

மலேசியாவின் பொருளாதார வளர்ச்சி மேலும் சிறந்து விளங்க அந்நிய முதலீடு 250 சதவிகிதத்தை எட்டியது. 2018-இன் முதல் ஒன்பது மாதங்களில் ரிம 49 பில்லியனை தொட்டது நாட்டின் பொருளாதாரம் சரியான பாதையில் செல்கிறது என்பதை உறுதி செய்கிறது. ஏற்றுமதி ரிம 96.4 பில்லியனை எட்டியுள்ளதாக நிதியமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார்.

நாட்டின் விலைவாசி கடந்த ஜனவரியில் இருந்து செப்டம்பர் வரை 1.2 சதவிதமே இருந்தது என்று அவர் கூறினார்.

” தற்போது உலக பொருளாதார நிலைமை மலேசியா நாட்டின் பொருளாதாரத்தை விட மோசமாக உள்ளது. ஆகவே, அனைத்து மலேசியர்களும் இனம், மதம் அல்லது பின்னணியை பார்க்காமல் ஒருங்கிணைந்த சிந்தனையில் செயல்பட்டால் பொருளாதாரம் மேலும் திறன்மிக்க முறையில் வளர்ச்சி அடையும், ” என புத்தாண்டு வாழ்த்து செய்தியை நிதியமைச்சின் அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தில் பதிவு செய்து இருந்தார்.


Pengarang :