SELANGOR

சிலாங்கூரில் வெ.4.52 பில்லியன் உள்நாட்டு முதலீடு

ஷா ஆலம், மார்ச் 20-

சிலாங்கூர் 2016ஆம் ஆண்டில் மொத்தம் 7.8 பில்லியன் வெள்ளி முதலீட்டைப் பெற்றது. அதில் 4.52 பில்லியன் வெள்ளி உள்நாட்டு முதலீடு என்று இன்று சட்டமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அந்த ஆண்டில் மாநில அரசு அங்கீகரித்த 242 தொழிற்பேட்டைகளின் இந்த முதலீடுகள் பதிவு செய்யப்பட்டன என்று துறைமுகம், தொழில்துறை மற்றும் சிறு, நடுத்தர வர்த்தகத் துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் கூறினார்.

அவற்றுள் 3.35 பில்லியன் வெள்ளி அந்நிய முதலீடுகள் என்றும் அவற்றின் வழி 16,000 வேலை வாய்ப்புகள் தோற்றுவிக்கப்பட்டன என்றும் அவர் சொன்னார்.

உலு பெர்ணம் தொகுதி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் டத்தோ ரோஸ்னி சொஹார் உள்நாட்டு முதலீடு குறித்து கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் டத்தோ தெங் மேற்கண்ட தகவல்களைத் தெரிவித்தார்.

மின்சாரம் மற்றும் மின்னியல் சாதனங்கள் தயாரிப்பில் முதலீட்டாளர்கள் அதிக நாட்டம் செலுத்தினர். மேலும் உணவு, குளிர்பானம் மற்றும் போக்குவரத்து ஆகிய துறைகளும் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்தன என்று அவர் சொன்னார்.


Pengarang :