KUALA LUMPUR, 22 Julai — Ketua Pesuruhjaya Suruhanjaya Pencegahan Rasuah Malaysia (SPRM) Latheefa Koya (dua, kiri) beramah mesra dengan Timbalan Koordinator Stolen Asset Recovery Initiative (StAR) Shervin Majlessi (kiri) pada Bengkel Serantau Mempromosi Ketelusan Pemunya Benifisiari di Asia Tenggara hari ini. Turut sama Penasihat Anti Rasuah Serantau United Nations Office on Drugs and Crime (UNODC) Francesco Checchi (kanan) dan wakil Pesuruhjaya Tinggi British di Kuala Lumpur Kebur Azbaha. — fotoBERNAMA (2019) HAK CIPTA TERPELIHARA
NATIONAL

வாரிசு உரிமையாளர் தொடர்பில் எஸ்பிஆர்எம் சட்டம் திருத்தம்

கோலாலம்பூர், ஜூலை 22-

2009ஆம் ஆண்டு எஸ்பிஆர்எம் சட்டப்படி ‘வாரிசு உரிமையாளர்’ விவகாரம் தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எஸ்பிஆர்எம்) தனக்கென சொந்த ஒதுக்கீட்டைக் கொண்டிருப்பது அவசியம் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த ஆணையம் சோதனையில் ஈடுபடும் போது சம்பந்தப்பட்ட தரப்பு சட்ட நடவடிக்கையில் இருந்து தப்பி விடாமலிருக்க இது அவசியம் என்று தலைமை ஆணையர் லத்தீஃபா கோயா கூறினார்.

“விசாரணைக்கு உட்படுத்தப்படும் தரப்பின் சொத்துகளுக்கு உரிமை கோரும் தரப்பு மீது புலன் விசாரணை மேற்கொள்வதற்கு ஏதுவாக 2009ஆம் ஆண்டு எஸ்பிஆர்எம் சட்டத்தில் அரசாங்கம் திருத்தம் செய்யவிருக்கிறது” என்றார் அவர்.
பல வழக்குகளில் பல தனிநபர்கள் சம்பந்தப்பட்ட சொத்துகளுக்கு பினாமியாக இருப்பது தெரிய வந்துள்ளது.

இந்நடவடிக்கை மூலம் அச்சொத்துகளின் உண்மையான உரிமையாளர் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிவிடும் சாத்தியம் உள்ளது என்று லத்தீஃபா தெரிவித்தார்.
பினாமியின் பேரில் பலர் குற்றச்செயலில் ஈடுபடுவதைத் தடுக்க நடப்பில் உள்ள சட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என்றார் அவர்.


Pengarang :