KUALA LUMPUR, 26 Julai — Yang Dipertua Dewan Rakyat Datuk Mohammad Ariff Md Yusof bersama Pengerusi Kaukus Pembaharuan dan Kerajaan Datuk Seri Anwar Ibrahim (tiga, kiri) bergambar bersama sebahagian peserta yang hadir pada Pembentangan Ekonomi Malaysia Kini dan Masa Depan di Parlimen hari ini. –fotoBERNAMA (2019) HAK CIPTA TERPELIHARA
NATIONAL

தேவை அடிப்படையிலான பொருளாதாரக் கொள்கை! – அன்வார்

கோலாலம்பூர், ஜூலை 26-

இன அடிப்படையின்றி மக்களின் தேவை அடிப்படையில் பொருளாதார கொள்கையை அமல்படுத்துவதில் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் தலைமையிலான பக்காத்தான் கூட்டணி அரசாங்கம் கவனம் செலுத்துகிறது.

ஆயினும், கூட்டரசு சட்டமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சிறப்புரிமை மற்றும் கோட்டா விவகாரங்களை இந்நடவடிக்கை உட்படுத்தாது என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

“எனவே கூட்டரசு சட்டமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கோட்டா பற்றியும் மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் போன்ற பல்கலைக்கழகம் இருப்பது குறித்தும் கேள்வி எழுப்ப மாட்டேன். ஆனால் நாம் மனிதநேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும். மலாய்க்காரராக இருந்தாலும் சீனராக இருந்தாலும் ஏழ்மையில் வாழ்பவர்களை ஏழை என்றே நாம் அழைப்போம்” என்றார்.

மலேசிய பொருளாதாரம்: இன்றும் எதிர்காலத்திலும் என்ற கருப் பொருளில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் உரையாற்றுகையில் அன்வார் மேற்கண்டவாறு பேசினார்.
நாட்டை வழி நடத்துவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டால், இன அடிப்படையில் இல்லாத பொருளாதார கொள்கையை அமல்படுத்தப் போவதாக அவர் சொன்னார்.


Pengarang :