NATIONAL

வாழ்க்கையை அனுபவிக்க பி40 பிரிவினருக்கும் வாய்ப்பளிப்பீர்! – ஜூரைடா

ஈப்போ, ஜூலை 26-

குறைந்த வருமானம் பி40 பிரிவினரும் சொகுசான வாழ்க்கை முறையை அனுபவிக்கவும் பொருளாதாரத்தை ஈட்டவும் வாய்ப்பளிக்கும்படி பெரிய நிறுவனங்களை வீடமைப்பு மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் ஜூரைடா கமாருடின் கேட்டுக் கொண்டார்.

இதன் தொடர்பில், இங்குள்ள மக்கள் வீடமைப்புத் திட்டத்தில் வசிக்கும் 30 குடும்ப மாதர்கள் நிறுவனத்தின் துண்டு துணிகளைக் கொண்டு தங்களின் ஆடைகளை தயாரிக்கும் வாய்ப்பளித்த நெசவாலை மற்றும் உள் அலங்காரத் துறையைச் சேர்ந்த ஈஸ்டர்ன் டெகோரேட்டர் எனும் நிறுவனத்தை அமைச்சர் வெகுவாகப் பாராட்டினார்.

“துண்டுத் துணிகளை இந்த நிறுவனம் பயன்படுத்தவதில்லை. எனவே, அவற்றை பிபி ஆர் குடியிருப்பாளர்களிடம் வழங்கினால் அவர்கள் அவைகளை ஒட்டுப் போட்டு தைத்து ஆடைகளாகத் தயாரித்துக் கொள்வார்கள் என்று நான் பரிந்துரைத்தேன் என்றார் அவர்.

“இந்நிறுவனம் பயன்படுத்தும் துணி வகைகள் மிகவும் விலை உயர்ந்தவையாகும். எனவே இந்தத் துணிகளை பி40 பிரிவைச் சேர்ந்தவர்கள் தரமான தலையணை, திரைத் துணிகளாகத் தயாரித்துக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படுகிறது. இது அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதோடு அவர்களின் மன உளைச்சலையும் குறைக்கும்” என்று செய்தியாளர் சந்திப்பில் ஜூரைடா கூறினார்.


Pengarang :