NATIONAL

மேல்முறையீட்டு நீதிமன்றம்: 1எம்டிபி: நஜீப் மீதான விசாரணை ஆகஸ்ட் 19-இல் தொடங்கும்!

புத்ராஜெயா, ஆக.5-

1எம்டிபி நிறுவனத்தை உட்படுத்தி முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் மீதான ஊழல் மற்றும் சட்ட விரோத பணப் பரிவர்த்தனை விசாரணை ஆகஸ்ட் 19ஆம் தேதி தொடங்கும் என நிர்ணயித்த உயர்நீதிமன்றத்தின் முடிவை மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று நிலைநிறுத்தியது.

தற்காப்பு மற்றும் வாதிகள் தரப்பு விண்ணப்பித்த இரு மேல் முறையீடுகளையும் டத்தோ அப்துல் ரஹ்மான் செபிலி, டத்தோ ஜபாரியா முகமது யூசோப் மற்றும் டத்தோ ஹஸ்னா முகமது ஹாஷிம் ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய நீதிபதி குழு ஒருமனதாக நிராகரித்தது.

“இது மேல் முறையீட்டு நீதிமன்றம் தலையிடுவதற்கு ஏற்ற வழக்கு அல்ல” என்று நீதிபதிகள் குழுவிற்குத் தலைமையேற்ற நீதிபதி அப்துல் ரஹ்மான் கூறினார்.
“வழக்கை ஒத்தி வைக்கும் விண்ணப்பத்தை நிராகரித்ததில் சம்பந்த்தப்பட்ட நீதிபதி தவறான அணுகுமுறையைப் பின்பற்றினார் என்பதை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளும் வகையில் வாதம் முன்வைக்கப்படவில்லை” என்றார் அவர்.

“வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க மறுத்து சம்பந்தப்பட்ட நீதிபதி அளித்த தீர்ப்பின்போது அவர் நியாயமாக பரிசீலிக்கவில்லை என்பதை நிரூபிக்க இரு தரப்பு வாதங்களும் தவறிவிட்டன” என்றார் அவர்.


Pengarang :