NATIONAL

நபிகள் நாயகத்தையும் அடிப் மரணைத்தையும் கேலி செய்தவருக்கு 30 மாத சிறை தண்டனை

 

கோலாலம்பூர், ஆக. 6-
சமூக ஊடகத்தில் நபிகள் நாயகத்தையும் இஸ்லாமிய சமயத்தையும் இழிவு படுத்தியதோடு தீயணைப்பு வீரர் முகமது அடிப் மரணத்தையும் அவமதித்த குற்றத்திற்காக அங்காடி வியாபாரி ஒருவருக்கு செஷன்ஸ் நீதிமன்றம் 30 மாத சிறை தண்டனை விதித்தது.

கடந்த ஜூலை 18ஆம் தேதி தம் மீது சுமத்தப்பட்ட 8 குற்றச்சாட்டுகளையும் சாவ் மன் ஃபட் ( வயது 43) என்ற அந்நபர் ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து நீதிபதி எம்.எம். எட்வின் பரஞ்சோதி இன்று இத்தீர்ப்பை வழங்கினார்.

இத்தீர்ப்பை அளிப்பதற்கு முன், இதர சமயத்தைக் கேலி செய்து வெளியிடப்படும் கருத்துகள் வெளியிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று நீதிபதி எட்வின் குற்றஞ்சாட்டப்பட்ட நபரைப் பார்த்து கூறினார்.

“அதேவேளையில், எதிர்பாராத வகையில் மரணமடைந்த முகமது அடிப்பின் மரணத்தினால் அன்னாரது குடும்பத்தினர் துயரத்தில் மூழ்கியிருந்த வேளையில் நடந்த இது போன்ற ஓர் இழிவான செயலை இந்நீதிமன்றம் சகித்துக் கொள்ளாது” என்றும் அவர் சொன்னார்.


Pengarang :