Amirudin Shari ketika ditemui media pada Majlis Temu Rapat Naib Canselor dan Pengurus Kanan Institusi Pengajian Tinggi (IPT) di Pusat Konvensyen Shah Alam, pada 28 Ogos 2019. Foto FIKRI YUSOF/SELANGORKINI
RENCANA PILIHANSELANGOR

இஸ்லாமிய சட்டத் திருத்தம்: இணக்கம் காணும் வழி ஆராயப்படுகிறது

ஷா ஆலம், ஆக.29-

சர்ச்சையை ஏற்படுத்துவதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட சிலாங்கூர் மாநில இஸ்லாமிய சமய சட்டத் திருத்த விவகாரத்தில் பக்காத்தான் ஹராப்பானின் உயர்மட்ட தலைவர்கள் மத்தியில் இணக்கம் காணும் வழியை ஆராய்ந்து வருவதாக மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட சட்டத் திருத்தம் பக்காத்தான் கூட்டணியின் அனைத்து பங்காளி கட்சிகளும் ஏற்றுக் கொள்ளும் வகையில் இருப்பதற்கான தீர்வு குறித்து செவ்வாய்க்கிழ்மை மாலை கெஅடிலான் அரசியல் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் அமிருடின் மேற்கண்ட கருத்தை வெளியிட்டார்.

‘ அந்தத் திருத்தம் குறித்து நான் இன்னும் அதிகாரப்புர்வமாக கட்சியின் தலைமைத்துவத்திடம் தெரிவிக்காத போதிலும், அது தொடர்பாக நடந்த சம்பவங்களை அக்கூட்டத்தில் நான் விவரித்தேன்” என்றார் அவர்.
“பக்காத்தான் உயர்மட்டத் தலைவர்களின் கருத்தை அறிந்து கொள்வதற்காக அவ்விண்ணப்பத்தை சமர்பித்தேன். இந்தத் திருத்தம் எவ்வாறு அமல்படுத்துவது என்பது குறித்தும் விவாதிப்பதுதான் எனது நோக்கமாகும்” என்றார் அமிருடின்.


Pengarang :