NATIONALRENCANA PILIHAN

பாக்காத்தான் ஐந்து முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டும்

கோலா லம்பூர், ஆகஸ்ட் 29:

எதிர் வரும் 15-வது பொதுத் தேர்தலில் புத்ராஜெயா அரசாங்கத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி அரசாங்கம் ஐந்து முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்த முயற்சிக்க வேண்டும் என்று பெர்சத்து கட்சியின் கொள்கை மற்றும் வியூக பிரிவின் தலைவர் டத்தோ டாக்டர் ராய்ஸ் ஹூசேன் முகமட் ஆரிப் கூறினார். வாழ்க்கை செலவீனங்கள், வாழ்க்கை தரம், வேலை வாய்ப்புகள், கட்டுப்படியான வீடுகள் மற்றும் மருத்துவ பராமரிப்பு செலவு ஆகிய அம்சங்கள்தான் மலேசிய மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என்று ஆணித்தரமான தெரிவித்தார் .

” ஐந்து முக்கிய அம்சங்களை நாம் செயல்படுத்த வேண்டும். வாழ்க்கை செலவீனங்களை கொஞ்சம் மேம்படுத்த வேண்டும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டியது நமது கடமையாகும். ஆனால், தற்போது வேலையின்மை இளைஞர்களிடையே மிக அதிகமாக உள்ளது. இதுவே நிதர்சனமான உண்மையாகும்.”

” பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி தொடர்ந்து மத்திய அரசாங்கத்தை வழி நடத்துவதாக இருந்தால், இந்த ஐந்து முக்கிய கூறுகளை நிவர்த்தி செய்து மக்களின் ஆதரவை திரும்ப பெற முடியும்,” என்று மலேசிய அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற     “இடைத்தேர்தல்கள் 15-வது பொதுத் தேர்தலின் முடிவை நிர்ணயம் செய்யுமா?” என்ற கருத்தரங்கத்தில் கலந்து கொண்ட போது இவ்வாறு அவர் பேசினார்.


Pengarang :