NATIONAL

தேர்தல் ஆணையத்தின் வலைத்தளம் மூலமாக இளைஞர்களை பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும்- பெர்சே

கோலா லம்பூர் , செப்டம்பர் 19:

தேர்தல் ஆணையத்தின் வலைத்தளம் மூலமாகவோ அல்லது அவர்களின் அலுவலகத்திலோதபால் அலுவலகம் அல்லது உதவி பதிவாளர் மூலமாகவோ, பாரங்களை பூர்த்தி செய்வதன் மூலம் இளைஞர்களை பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று பெர்சே அமைப்பு கேட்டுக் கொண்டது.

தேர்தல் ஆணையத்தின் தலைவர் அசார் ஹருன்இந்த செயல்முறையில் தமக்கு எந்த முரண்பாடும் இல்லையென்றும், வாக்களிக்கும் வயதை 18-ஆகக் குறைக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியலமைப்பில் திருத்தம் செய்வதற்காக காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

கடந்த ஜூலை 16-ஆம் தேதிமக்களைவையில் இரு தரப்பு ஆதரவுடன்வாக்களிக்கும் வயதையும், தேர்தலில் போட்டியிடம் வயதை 18-ஆக குறைப்பதற்கான மத்திய அரசியலமைப்பை திருத்துவதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டதுஇந்த மசோதாவின் மூலம் தானியங்கி வாக்காளர் பதிவும் இயக்கப்படும்.

கடந்த செப்டம்பர் 3-ஆம் தேதி, இந்த திருத்தத்தை செயல்படுத்த தேர்தல் ஆணையம் 18 முதல் 24 மாதங்கள் வரை ஆகும் என்று கூறியிருந்தது.

இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்த அசார்தானியங்கி வாக்காளர் பதிவு முறையை செயல்படுத்த நேரம் தேவைப்படுவதாகவும், இதற்காக ஒரு புதிய அமைப்பு தேவை என்றும் கூறினார்.

இருப்பினும், 18 வயது பதிவை அமல்படுத்துவது எப்போது என்ற முடிவினை எடுப்பதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை,” என்று அவர் கூறினார்.


Pengarang :