EXCO pembangunan sosio ekonomi,
SELANGOR

வறுமை ஒழிப்பு வரைவு திட்ட ஒதுக்கீடு அதிகரிக்க வேண்டும்!

கிள்ளான், செப்.24-

சிறிய தொழில்முனைவர்களிடம் இருந்து கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் ஆண்டுதோறும் அதிகரித்து வருவதால், ஏழ்மை ஒழிப்பு வரைவு திட்டத்திற்கான ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டும் மாநில அரசாங்கம் கேட்டுக் கொள்ளப்பட்டது.

2003ஆம் ஆண்டு தொடங்கி மேற்கொள்ளப்பட்டு வரும் இத்திட்ட்டத்திற்கு 2 மில்லியன் வெள்ளி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று மேம்பாட்டு, சமூக பொருளாதார மேம்பாடு மற்றும் பரிவுமிக்க அரசாங்க துறை ஆட்சிக் குழு உறுப்பினர் வி. கணபதி ராவ் சுட்டிக் காட்டினார்.

இத்திட்டத்திற்கான கோரிக்கை 12 விழுக்காடு அதிகரித்துள்ள வேளையில், சாதனங்களிந் விலைவாசியும் உயர்ந்துள்ளதால்ம் சம்பந்தப்பட்ட ஒதுக்கீடு போதுமான அளவில் இல்லை என்றார் அவர்.

இதற்கான ஒதுக்கீடு போதுமான அளவில் இல்லாததால், ஒவ்வொரு மாவட்ட மற்றும் நில அலுவலகமும் அதிக எண்ணிக்கையிலான சிறிய தொழில்முனைவர்கள் இத்திட்டத்திற்கு உண்மையாக தகுதி பெற்றுள்ள போதிலும் பெரும்பாலோரின் விண்ணப்பங்களை நிராகரிக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது என்றும் வி.கணபதி ராவ் குறிப்பிட்டார்.

எனவே, மாநிலத்தின் சமூக நல கொள்கைக்கு ஏற்ப வரும் காலத்தில் இந்த ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என தாம் நம்புவதாக அவர் சொன்னார்.


Pengarang :