NATIONAL

மலேசியா மேலும் 10 மனிதாபிமான உதவி கன்டெய்னர்களை பாலஸ்தீனத்திற்கு அனுப்பியுள்ளது

கோலாலம்பூர், மே 7: மலேசியா மேலும் 10 மனிதாபிமான உதவி பொருட்கள் அடங்கிய கன்டெய்னர்களை பாலஸ்தீனத்திற்கு அனுப்பியுள்ளது. இந்த உதவி உட்பட தற்போது மலேசியா மொத்த 110 கன்டெய்னர்களை அனுப்பியுள்ளது என்று இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் நிக் நஸ்மி நிக் அஹ்மட் கூறினார்.

எகிப்து தலைநகர் கெய்ரோவில் நேற்று நடைபெற்ற இந்த பணியின் தொடக்க விழாவில் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி இன் பிரதிநிதியாக கலந்து கொண்ட அவர், அந்த கன்டெய்னர்களில் அரிசி, மாவு போன்ற அடிப்படை உணவுகளும், சானிட்டரி நாப்கின்கள் உள்ளிட்ட தனிப்பட்ட சுகாதாரப் பொருட்களும் இருந்ததாகக் கூறினார்.

” இந்த உதவியின் மொத்த மதிப்பு RM12 மில்லியன் ஆகும். இது காஸாவில் உள்ள 60,000 குடும்பங்களுக்குப் பயனளிக்கும்” என்று அவர் முகநூல் பதிவின் மூலம் தெரிவித்தார்.

– பெர்னாமா


Pengarang :