KOTA BHARU , 10 Nov — Perdana Menteri Tun Dr. Mahathir Mohamad mengadakan sidang media selepas menghadiri majlis ramah mesra bersama pimpinan Pakatan Harapan Kelantan sempena lawatan sehari beliau ke Kelantan, hari ini. — fotoBERNAMA (2018) HAK CIPTA TERPELIHARA
NATIONALRENCANA PILIHAN

தஞ்சோங் பியாய் இடைத்தேர்தல்: பக்காத்தான் துல்லித ஆய்வு மேற்கொள்ளும்!

கோலாலம்பூர், நவ.18-

  1. தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கான காரணம் குறித்து துல்லிதமான ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி தலைவரும் பிரதமருமான துன் டாக்டர் மகாதீர் முகமது கூறினார்.
    இத்தேர்தலில் பெரும்பான்மையான வாக்குகள் எதிர்க்கட்சி வசம் செல்லும் என எதிர்பார்த்தன் காரணமாக வாக்காளர்கள் செய்த முடிவை ஏற்றுக் கொள்வதாக டாக்டர் மகாதீர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
    2,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைவோம் என எதிர்பார்த்த வேளையில், 15,086 வாக்குகள் பெரும்பான்மையில் தோல்வியடையும் என தாம் எதிர்பார்க்கவில்லை என்றார் அவர்.
    இத்தோல்விக்கான காரணம் நேர்மையாகவும் துல்லிதமாகவும் அனைத்து கோணங்களில் இருந்தும் ஆராயப்படும் என்றும் அவர் சொன்னார்.

Pengarang :