Bergambar dihadapan Hyper Colour Resources, Kota Raja ketika Kembara Sukses Hijrah Selangor pada 19 Disember 2019. Foto FIKRI YUSOF/SELANGORKINI
NATIONALSELANGOR

சட்டை அச்சடிக்கும் தொழில்முனைவருக்கு உதவிக்கரம் நீட்டிய ஹிஜ்ரா!

கிள்ளான், டிச.19-

வர்த்தக உலகத்தில் வீழ்ச்சியுற்ற தன்முனைப்பை இழந்தபோது எளிதான முறையில் விரைவாக நிதியுதவி அளிக்கும் சிலாங்கூர் ஹிஜ்ரா அறவாரியத்தைப் பற்றி தான் அறிந்து கொண்டதாக தொழில்முனைவர் ரஷிடி ரம்லி தெரிவித்தார்.

ஹிஜ்ராவின் உதவியுடன் தான் சட்டை அச்சடிக்கும் வர்த்தகம் ஒன்றை சிறிய அளவில் தொடங்கியதாகவும் 7 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று கடையின் உரிமையாளராகி இருப்பதாகவும் அவர் சொன்னார்.

ஹிஜ்ராவிடம் கடனுதவி பெற்றது முதல், தனது வர்த்தகம் படிப்படியாக வளர்ச்சியடைந்ததாக அவர் குறிப்பிட்டார்.
“உண்மையாகவே ஒரு வர்த்தகம் புரிவதற்கு பொறுமையும் சக வர்த்தகர்களோடு போட்டியிடும் ஆற்றலைக் கொண்டிருப்பது அவசியமாகும். சட்டையில் அச்சடிக்கும் வர்த்தகத்தில் எனக்கு அதிகளவு ஈடுபாடு இருந்ததால் இதுவரை நான் தாக்குப்பிடிக்க முடிந்தது” என்று கூறிய ரஷிடி அதேவேளையில் இந்த ஹிஜ்ரா திட்டம் தனக்கு பேருதவியாக இருந்ததையும் ஒப்புக் கொண்டார்.

2019 சிலாங்கூர் ஹிஜ்ரா வெற்றி பயண நிகழ்ச்சிக்குப் பின்னர் அவரது கடையில் மீடியா சிலாங்கூருடான நேர்காணலில் அவர் மேற்கண்டவாறு கூறினார்.


Pengarang :