NATIONAL

டோங் ஜோங்: ஜாவி கற்பித்தல் இஸ்லாமிய மதத்தை நுழைத்து விடும் என்று பெற்றோர்கள் அச்சம் !!!

கோலா லம்பூர், டிசம்பர் 28:

சீனப்பள்ளி மற்றும் தமிழ்ப்பள்ளிகளில் ஜாவி பாடம் கற்பித்தல் தொடர்பில் ஏற்பட்ட  முரண்பாடுகளுக்கு மத்தியில்சீனக் கல்வியாளர்கள் குழுவின் பிரதிநிதிகளான டோங் ஜோங் மற்றும் மலேசியக் கல்வி அமைச்சின் பிரதிநிதிகள் ஒரே மேடையில்   தங்கள் நிலைப்பாட்டை பகிர்ந்து கொண்டனர். இந்த நிகழ்வு கோலாலம்பூர் சிலாங்கூர் சீன மண்டபத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன் பள்ளிகளில் ஜாவி கற்றல் அனுபவத்தை ஒப்புக்கொண்ட டோங் ஜோங், அப்போது இஸ்லாமிய மதத்திற்கு அவரும் மாற்றவில்லை என்றும் ஒப்புக் கொண்டார். ஆயினும்,  இது குறித்துப் பேசிய அதன் பொதுச் செயலாளர் எங் சாய் ஹெங்இந்த நடவடிக்கையானது மாணவர்களை அச்சுறுத்தும் என்று குழுவின் உறுப்பினர்கள் மத்தியில் அச்சங்கள் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அமைச்சின் இந்த நடவடிக்கை பயம் மற்றும் அவநம்பிக்கையை ஏற்படுத்தி இருப்பதை எங் விளக்கினார்

சீன கல்வியாளர் குழு ஜாவி பாடத்தை எதிர்க்கவில்லை என்று எங் மீண்டும் மீண்டும் கூறினார்ஆனால், அடுத்த ஆண்டு மலாய் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு ஜாவியின் மூன்று பக்க போதனைகளை தீர்மானிப்பதில் பள்ளி வாரியம் ஈடுபட வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் தொடர்புகொள்வதற்கு கல்வி அமைச்சு திறந்த மனதுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

அதே நிகழ்ச்சியில் கல்வி அமைச்சின் பிரதிநிதியாக கலந்து கொண்ட  பேசிய மலேசிய கல்வி உதவி இயக்குனர் ஹாபிபா அப்துல், மலாய் மொழியின் பாரம்பரியத்தை பற்றி அறிந்து கொள்வதற்காக ஜாவி எழுத்து பாடம் மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டது என்று கூறினார்.

#செல்லியல்


Pengarang :