Foto BERNAMA
NATIONALRENCANA PILIHAN

சட்டவிரோதக் குடியேறிகள் விவகாரத்திற்கு தீர்வு காண புதிய திட்டம்

புத்ராஜெயா, டிச.30-

நாட்டினுள் சட்டவிரோதமான முறையும் நுழையும் அந்நிய குடியேறிகள் பிரச்னையை முழு அளவில் எதிர்கொள்வதற்கன சட்ட விரோத குடியேறிகள் முழுமையான அமலாக்கத் திட்டம் அடுத்த ஆண்டு தொடங்கும்.  குறிப்பிட்ட காலக் கட்டத்தில் நாட்டினுள் சட்ட விரோதமாக நுழையும் அந்நிய நாட்டவர்களின் எண்ணிக்கையை பூஜ்யமாக்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

நடப்பில் உள்ள அமலாக்க செயல்திட்டங்களைச் சீரமைப்பதுடன் மேலும் சில நடவடிக்கைகள் மூலம் அதன் செயல்திறனை இத்திட்டம் வலுவூட்டும்.
கடுமையான சட்டங்களை அமல்படுத்துவதோடு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் தொடர்பில் பல்வேறு அமைச்சுகளின் வியூக ஒத்துழைப்புடன் உள்துறை அமைச்சு முழுமையான திட்டத்தை வடிவமைத்திருப்புள்ளதாக உள்துறை அமைச்சர் டான்ஸ்ரீ முகைதின் யாசின் கூறினார்.

நாட்டின் சமூக அம்சம் மற்றும் சட்டத்துறையில் எதிர்மறையானத் தாக்கத்தை தொடர்ந்து ஏற்படுத்தும் தேசிய விவகாரமாக சட்டவிரோத குடியேறிகள் விவகாரத்திற்கு ஒரு தீர்வு காண்பது அவசியமாகும் என்றார் அவர்.
“இந்த விவகாரத்தில் இவ்வாண்டு பல்வேறு வெற்றிகளைப் பதிவு செய்துள்ள போதிலும் இத்திட்டமானது 2020ஆம் ஆண்டு தொடங்கி அடுத்த 5 ஆண்டுகளுக்கான திட்டமாக வரையப்பட்டுள்ளது” என்று அவர் சொன்னார்.


Pengarang :