ANTARABANGSANATIONAL

கொரோனா வைரஸ்: அனைத்து நுழைவாயில்களிலும் கடுமையான சுகாதார சோதனை!

கோலாலம்பூர், ஜன. 28-

கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான ஆயத்த நடவடிக்கையாக சுகாதார அமைச்சு நாட்டின் அனைத்து நுழைவாயில்களிலும் சுகாதார சோதனையைக் கடுமையாக்கியுள்ளது.
காய்ச்சல் கண்டவர்களை பரிசோதனை செய்ய நுழைவாயில்களில் வெப்ப பரிசோதனை கருவிகளைப் பொருத்துவதும் ஆயத்த நடவடிக்கைகளில் அடங்கும் என்று சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

ஜோகூர் பாரு மாவட்டத்தில் சுல்தான் இஸ்கந்தர் கட்டடம் மற்றும் சுல்தான் அபு பாக்கார் கட்டடம் என மொத்தம் ஆறு நுழைவாயில்கள் உள்ளன. இப்பகுதிகள் சிங்கப்பூரில் இருந்து வருவோருக்கான தரைப் பகுதி நுழைவாயில்கள் என்பதை அவர் சுட்டிக் காட்டினார். 2019 முழுமையும் சுல்தான் அபு பாக்கார் கட்டடத்திற்கு சீனாவில் இருந்து சராசரியாக தினசரி 3,000 முதல் 3,500 சுற்றுப் பயணிகள் வருகை புரிந்ததாக அறியப்படுகிறது.


Pengarang :