PBTSELANGOR

நெகிழிப் பைகளுக்கு 20 காசு: 38,058 சுற்றறிக்கைகளை எம்பிபிஜே விநியோகித்தது!

பெட்டாலிங் ஜெயா, பிப்.10-

நெகிழிப் பைகளுக்கு 20 காசு வசூலிக்கப்படுவது குறித்து கடந்தாண்டு டிசம்பர் தொடங்கி இதுவரை மொத்தம் 38,058 சுற்றறிக்கைகளை பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்றம் விநியோகித்துள்ளது.
“வாடிக்கையாளர்களுக்கு வர்த்தக நடத்துநர்கள் இலவசமாக வழங்குவதைத் தடுப்பதற்கும் இதன் பயனீட்டை முழுமையாகக் குறைக்கவும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது” என்று எம்பிபிஜே தலைவர் டத்தோ முகமது சாயுத்தி பக்கார் தெரிவித்தார்.

“கட்டுப்பாடற்ற நெகிழிப் பைகளின் பயன்பாட்டினால் , வர்த்தகப் பகுதிகளில் திடக்கழிவு பொருட்களின் குவியல் அதிகளவில் இருக்கின்றனர். கழிவுப் பொருட்களை அகற்றுவது எம்பிபிஜே கடந்தாண்டு மொத்தம் 8.6 மில்லியன் ரிங்கிட்டை செலவிட்டது” என்று அவர் குறிப்பிட்டார்.

எனவே, நெகிழிப் பைகளுக்கான கட்டணத்தை ஊராட்சி மன்றம் மூலம் வசூலிப்பது என்றும் அந்தத் தொகை மாநிலத்தின் தாபோங் அமானாவிற்கு செலுத்துவது என்றும் மாநில அரசாங்கம் அங்கீகரித்தது. இந்நிதி பின்னர் சுற்றுச் சூழல் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும்.


Pengarang :