KUALA LUMPUR, 17 Mac — Pihak pengurusan Pertubuhan Berita Nasional Malaysia (BERNAMA) turut melaksanakan operasi pembersihan sanitasi di Wisma Bernama bagi mencegah penularan COVID-19 hari ini.?BERNAMA akan beroperasi seperti biasa untuk menyampaikan maklumat kepada orang ramai dalam tempoh arahan perintah kawalan pergerakan selama 14 hari yang bermula esok. ?– fotoBERNAMA (2020) HAK CIPTA TERPELIHARA?
RENCANA PILIHAN

கொரொனா-19 வைரஸ் தடுப்பு மருந்தின் முதல் இயக்க சோதனை தொடங்கியது !!!

ஜெனிவா, மார்ச் 19:

கொரொனாவைரஸ் தடுப்பு மருந்தின் முதல் இயக்க சோதனை தொடங்கியது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் புதன்கிழமை தெரிவித்தார்.

சீனாவில் பரவத் தொடங்கிய 60 நாட்களுக்குப் பிறகு இந்த சோதனை தொடங்கியதாக அனடோலு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், மருத்துவ பரிசோதனையின் இருப்பிடத்தை அவர் வெளியிடவில்லை.

தடுப்பு மருந்து உலகளாவிய அளவில்பயன்படுத்தப்படுவதற்கு குறைந்தபட்சம் 12 முதல் 18 மாதங்கள் வரை தேவைப்படும் என்று சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.

“பல நாடுகள் தற்போது கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதை நாங்கள் அறிவோம், மேலும் இந்த வைரஸ் பரவாமல் தடுக்க போராடுகிறோம். நம்பிக்கை இன்னும் உள்ளது” என்று டெட்ரோஸ் கூறினார்.

தொற்றுநோய் பரவாமல் தடுக்க உதவும் முக்கிய விளையாட்டு நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்களை இரத்து செய்வது போன்ற பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒவ்வொரு நாடும் எடுக்கலாம்.

இந்த நடவடிக்கைகள் சுகாதார அமைப்பின் சுமையை குறைக்கவும், தொற்றுநோயை சமாளிக்கவும் உதவும், மேலும் தடுப்பு நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்தவும் அனுமதிக்கும் என்று அவர் கூறினார்.


Pengarang :