SELANGOR

டாமன்சாரா டாமாய், சவுஜானா டாமன்சாரா பகுதிகளில் குடிநீர் விநியோகம் வழக்க நிலைக்குத் திரும்பியது

ஷா ஆலம், மார்ச் 20-

டாமன்சாரா டாமாய் மற்றும் சவுஜானா டாமன்சாரா ஆகிய பகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு குடிநீர் விநியோகம் வழக்க நிலைக்குத் திரும்பியது என்று ஆயர் சிலாங்கூர் நிர்வாக நிறுவனத் தொடர்பு பிரிவு தலைவர் அப்துல் ஹாலிம் மாட் சோம் கூறினார். ஆயர் சிலாங்கூர் பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிய வாடிக்கையாளர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
அனைவரும் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துவர் என நம்புகிறோம் என்றார் அவர்.

குடிநீர் விநியோகம் குறித்து விரிவான விளக்கம் தேவைப்படும் வாடிக்கையாளர்கள் ஆயர் சிலாங்கூரின் கீச்சகம், முகநூல், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம். கடந்த செவ்வாய்க்கிழமை கோத்தா டாமன்சாரா தண்ணீர் அணைக்கட்டின் அளவு குறைந்ததன் எதிரொலியாக பெட்டாலிங் வட்டாரத்தில் தண்ணீர் விநியோகம் தடைப்பட்டது. இதன் காரணமான அங்குள்ள 30,573 பயனீட்டாளர்கள் பாதிக்கப்பட்டனர்.


Pengarang :