A health worker rests at a drive-thru coronavirus disease (COVID-19) testing center at KPJ Damansara Specialist Hospital, in Petaling Jaya, Malaysia March 28, 2020. REUTERS/Lim Huey Teng
NATIONALSELANGOR

சிலாங்கூர் மருத்துவ பணியாளர்களுக்கு ரிம 1.344 மில்லியன் மதிப்பிலான உணவு பொருட்கள்

ஷா ஆலம், ஏப்ரல் 1:

சிலாங்கூர் மாநில அரசாங்கம் நடமாடும் கட்டுபாடு ஆணை (பிகேபி) காலகட்டத்தில் உன்னதமான சேவையை வழங்கி வரும்  மருத்துவ பணியாளர்களுக்கு இலவச உணவு திட்டத்திற்காக ரிம 1.344 மில்லியன் ஒதுக்கீடு செய்துள்ளது என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி சிலாங்கூர் மாநில பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை அவரது அதிகாரப் பூர்வ இல்லத்தில் அறிவிக்கும் போது இவ்வாறு கூறினார்.

” 2,500 முன்னணி பணியில் இருக்கும் பணியாளர்களின் பிள்ளைகளை பராமரிப்பு ஊக்குவிப்பு ஒதுக்கீடாக ரிம 1.5 மில்லியனை மாநில அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது,” என்று பெருமிதத்தோடு தெரிவித்தார்.

இதனிடையே 5,931 சிலாங்கூர் மாநில மருத்துவ பணியாளர்களுக்கு ரிம 200 வழங்கும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது என அவர் மேலும் குறிப்பிட்டார்.


Pengarang :