HULU LANGAT, 5 April — Ahli Persatuan Bulan Sabit Merah Malaysia melakukan kerja-kerja semburan sanitasi di sekitar kawasan sekatan jalan raya berikutan Perintah Kawalan Pergerakan Diperketatkan (PKPD) di Kampung Sungai Lui Batu 21 hari ini. Kerajaan menguatkuasakan PKPD di kawasan Batu 21 hingga Batu 24 Sungai Lui, Hulu Langat, Selangor sehingga 13 April ini. Keputusan itu dibuat setelah mengambil kira jumlah kes positif COVID-19 yang tinggi, membabitkan pelajar Maahad Tahfiz AnNabawiyyah di Batu 23 Sungai Lui, Hulu Langat. PKPD itu melibatkan tujuh kampung iaitu dua perkampungan Orang Asli dan lima perkampungan Melayu melibatkan 3,918 orang penduduk. –fotoBERNAMA (2020) HAK CIPTA TERPELIHARA
SELANGOR

சுங்கை லூயில் கடுமையாக்கப்பட்ட நடமாட்ட கட்டுப்பாடு நீட்டிக்கப்படலாம்

ஷா ஆலம், ஏப்.10-

பத்து 21 தொடங்கி பத்து 24 பகுதிகளில் விதிக்கப்பட்டுள்ள கடுமையாக்கப்பட்ட நடமாட்ட கட்டுப்பாடு ஆணை நீட்டிக்கப்படும் சாத்தியத்திற்கு அங்குள்ள குடியேற்பாளர்கள் தயாராக இருக்க வேண்டும் என்று டுசுன் துவா சட்டமன்ற உறுப்பினர் எற்றி ஃபைசால் எற்றி யூசோப் கூறினார். இப்பகுதிகளில் கோவிட்-19 தொற்று பரவலை முறியடிக்க அரசாங்கம் மேற்கொள்ளும் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட குடியிருப்பாளர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

எது எப்படியாயினும், இங்குள்ள மூத்த குடிமக்கள், சிறார் உட்பட அனைவரின் அடிப்படை தேவைகளையும் அத்தியவசிய பொருட்கள் கிடைப்பதையும் அரசாங்கம் உறுதி செய்யும் என்று அவர் சொன்னார்.
“ இங்குள்ள குடியிருப்பாளர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஏதேனும் பிரச்னை இருந்தால், உடனடியாக என் முகநூலில் வாயில் என்னிடம் தெரிவிக்கலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று சிலாங்கூர்கினியிடம் அவர் தெரிவித்தார்.

இவ்வட்டாரத்தில் 274 தாஹ்ஃபிஸ் குடியிருப்பாளர்கள் உட்படுத்தி மொத்தம் 17 பேருக்கு கோவிட்-19 உறுதி செய்யப்பட்டதும் கடந்த மார்ச் 30 ஆம் தேதி கடுமையாக்கப்பட்ட நடமாட்ட கட்டுப்பாடு ஆணை இங்கு பிரகடணப்படுத்தப்பட்டது.


Pengarang :