Sumbangan barang asas yang bakal diagihkan kepada penghuni PPR dan Cousil Homes di Selangor. Foto Facebook Haniza Talha
RENCANA PILIHANSELANGOR

பிபிஆர் மற்றும் கன்றி ஹோம்ஸ் குடியிருப்பாளர்களுக்கு சிலாங்கூர் அரசு ரிம.131,600 ஒதுக்கீடு!

ஷா ஆலம், ஏப்.21-

சிலாங்கூர் பரிவுமிக்க உதவித் திட்டத்தின் தனது அதிகாரத்திற்கு உட்பட்ட மக்கள் வீடமைப்புத் திட்டம் (பிபிஆர்) மற்று கன்று ஹோம்ஸ் திட்டங்களுக்கு மொத்தம் ரிம. 131,600 ஒதுக்கப்பட்டுள்ளது என்று வீடமைப்புத் துறை ஆட்சிக் குழு உறுப்பினர் ஹானிஸா தால்ஹா கூறினார். இதில் பிபிஆர் கம்போங் பாரு ஹைக்கோம், பிபிஆர் கோத்தா டாமன்சாரா, பிபிஆர் செரெண்டா மற்றும் பாங்கியில் உள்ள கன்றி ஹோம்ஸ் ஆகிய குடியிருப்புகளைச் சேர்ந்த 2,632 குடும்பங்களுக்கு அத்தியாவசிய உதவிப் பொருட்களும் அவற்றுள் அடங்கும் என்றார் அவர்.

இந்த உதவிப் பொருட்கள் விநியோக நடவடிக்கை சிலாங்கூர் வீடமைப்பு மற்றும் சொத்துடமை வாரியம் (எல்பிஎச்எஸ்) மற்றும் அதன் துணை நிறுவனமான பிஎஸ்எஸ்எஸ்பி ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டதாக அவர் சொன்னார். அரசி, சமையல் எண்ணெய், சீனி, மாவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய உதவிப் பொருள் கூடை ஒன்றின் மதிப்பு ரிம. 50 ஆகும் என்று அவர் விவரித்தார்.
நடமாட்ட கட்டுப்பாடு ஆணை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பல குடும்பங்கள் குறிப்பாக பி40 குடும்பங்கள் மற்றும் பிபிஆர் குடியிருப்பாளர்கள் பாதிக்கப்பட்டனர் என்றார் அவர்.


Pengarang :