Pasukan petugas kesihatan Selcare menjalankan saringan komuniti Covid-19 dari rumah ke rumah anjuran Kerajaan Selangor secara percuma di Rantau Panjang, Klang pada 19 April 2020. Foto ASRI SAPFIE/SELANGORKINI
RENCANA PILIHANSELANGOR

சிலாங்கூரில் 11 புதிய கோவிட்-19 நோய் சம்பவங்கள்; பிகேபியை பின்பற்றுங்கள் – எஸ்திஎப்சி

ஷா ஆலம், ஏப்ரல் 21:

இன்று நண்பகல் 12 வரை சிலாங்கூர் மாநிலத்தில் 11 கோவிட்-19 புதிய சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று சிலாங்கூர் கோவிட்-19 தடுப்பு பணிக்குழுவின் (எஸ்திஎப்சி) டிவிட்டரில் தெரிவித்தது.நேற்றைய தினத்தை விட இன்று சம்பவங்கள் அதிகரித்துள்ளது வருத்தத்தை அளிக்கிறது.

” நேற்றோடு ஒப்பிடும் போது இன்று கோவிட்-19 நோய் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.தொடர்ந்து நடமாடும் கட்டுப்பாடு ஆணையை (பிகேபி) பின்பற்றி நடக்க வேண்டும். அலட்சியமாக இருக்காதீர்கள்,” என்று எஸ்திஎப்சி டிவிட்டரில் பதிவு செய்துள்ளது.

நம் நாட்டில் இன்று வரை கொவிட்-19 நோயால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 5,482 ஆக உயர்ந்துள்ளது. இன்று புதியதாக 57 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இன்று மூன்று மரணங்கள் ஏற்பட்டு,  இதுவரையிலான மரண எண்ணிக்கை 92-ஆகவே உள்ளது என்று சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

மேலும், இன்று 54 பேர்கள் சிகிச்சையிலிருந்து குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். இதைத் தொடர்ந்து இதுவரையில் கொவிட்-19 பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,349 ஆக உயர்ந்திருக்கிறது.


Pengarang :