Sebuah premis diarah tutup oleh MPK kerana tidak mempunyai lesen dalam operasi di sekitar Kampung Jawa dan Sungai Kapar Indah, Klang pada 21 April lalu. Foto Facebook MPK
PBTSELANGOR

கிள்ளானில் 14 வணிக உரிமம் இல்லாத கடைகள் மூடப்பட்டன !!!

ஷா ஆலம், ஏப்ரல் 22:

கிள்ளான் வட்டாரத்தில் கம்போங் ஜாவா மற்றும் சுங்கை காப்பார் இண்டா பகுதிகளில் வணிக உரிமம் இல்லாத 14 கடைகள் மூடப்பட வேண்டும் என கிள்ளான் நகராண்மை கழகம் (எம்பிகே) ஆணையிட்டது என அதன் சட்டப் பிரிவு இயக்குநர் டத்தின் ஃபாஸ்ஸிலா அப்துல் அஸிஸ் தெரிவித்தார். இந்த இரண்டு இடங்களிலும் எம்பிகே அமலாக்க அதிகாரிகள் பரிசோதனை நடத்தும் போது கண்டு பிடித்தனர்.

கம்போங் ஜாவாவில் மொத்தம் எட்டு கடைகளில் பரிசோதனை நடத்தப்பட்டது, அதில் நான்கு கடைகளுக்கு வணிக உரிமம் இல்லாத நிலையில் மூடும்படி கட்டளை பிறப்பித்துள்ளது. இதையடுத்து, சுங்கை காப்பார் இண்டாவில் 38 கடைகள் பரிசோதனை நடத்தப்பட்டதில் 10 மூடும்படி எம்பிகே கட்டளை இட்டது என எம்பிகேவின் அகப்பக்கத்தில் ஃபாஸ்ஸிலா பதிவு செய்துள்ளார்.


Pengarang :