KOTA KINABALU, 18 April — TIDAK LEBIH 10KM … Anggota polis dan tentera melakukan sekatan jalanraya di Lok Kawi bagi menghalang orang ramai daripada Sabindo dan Kinarut berurusan membeli barang keperluan dan urusan bank di Putatan untuk mengelakkan kesesakan di daerah Putatan hari ini. –fotoBERNAMA (2020) HAK CIPTA TERPELIHARA
NATIONALRENCANA PILIHAN

பிகேபி: பொது சந்தை இயங்கும் நேரம் ரமலான் மாதத்தில் நீட்டிப்பு!

ஷா ஆலம், ஏப்.23-

நடமாட்ட கட்டுப்பாடு ஆணை காலக் கட்டத்தில் பொது சந்தை காலை 6 மணி தொடங்கி நண்பகல் 12 மணி வரை மட்டுமே இயங்கும் வேளையில், இது ரமலான் மாதத்தில் பிற்பகல் 2 மணி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புக்கான முதன்மை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.

இதைத் தவிர்த்து, பொது மக்கள் நடமாட்டத்திற்கான அனுமதி இதுவரை மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை வழங்கப்பட்டிரிந்தது, இனி ரமலான் மாதத்தில் மாலை 4 மணிக்கே தொடங்க அனுமதிக்கப்படும் என்றார் அவர்.
இஸ்லாமிய சமயத்தவர்கள் நோன்பு துறப்பதற்காகவே இந்த கால நீட்டிப்பு சலுகை வழங்கப்பட்டுள்ளது என்று அவர் விவரித்தார்.

ரமலான் மாதம் முழுவதும் பிகேபி 1,2 மற்றும் 3ஆம் காலக் கட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்று அமைச்சர் நினைவுறுத்தினார்.


Pengarang :