Pasukan petugas perubatan menjalankan ujian saringan Covid-19 kepada penduduk di Hulu Langat, pada 12 April 2020. Ujian itu dilakukan selepas pengumuman Dato’ Menteri Besar Dato’ Seri Amirudin Shari untuk menjalankan saringan besar-besaran di zon merah di seluruh Selangor. Foto HAFIZ OTHMAN/SELANGORKINI
SELANGOR

சிலாங்கூரில், உலு லங்காட் தொடர்ந்து சிவப்பு மண்டலமாக உள்ளது !!!

ஷா ஆலம், ஏப்ரல் 25:

நேற்று நண்பகல் 12 மணி வரையும் சிலாங்கூர் மாநிலத்தில் உலு லங்காட் மாவட்டம் சிவப்பு மண்டலமாக இருப்பதாகவும் மற்றும் மேலும் 27 பகுதிகள் மஞ்சள் மண்டலங்களாக தொடர்ந்து அடையாளம் காணப்பட்டுள்ளது என சிலாங்கூர் மாநில கோவிட்-19 தடுப்பு பணிக்குழு (எஸ்திஎப்சி) அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. உலு லங்காட்டில் மட்டுமே 171 சம்பவங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் இன்னும் 64 நோயாளிகள் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று எஸ்திஎப்சி கூறியிருக்கிறது.

காஜாங் பகுதியில் 158 சம்பவங்களும் அதில் இன்னும் 17 நோயாளிகள் குணமடையாமல் உள்ளதாகவும் கிள்ளான் பகுதியில் மொத்தம் 123 சம்பவங்கள் ஏற்பட்டுள்ள வேளையில் இன்னும் 30 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதாக தமது அறிக்கையில் எஸ்திஎப்சி தெரிவித்துள்ளது.


Pengarang :