Penolong Pegawai Perubatan Jabatan Kecemasan Hospital Tengku Ampuan Rahimah (HTAR) Klang, Muhammad ‘Aifaa Ibrahim (kiri) bersama rakan bertugas dalam rasa bahang sambil menahan lapar dan dahaga ketika Ramadan untuk merawat pesakit mempunyai simptom Covid-19.
NATIONAL

மே 18 நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கலந்து கொள்ளும் முன் அனைவரும் கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்

கோலா லம்பூர், ஏப்ரல் 28

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மே 18-இல் நடக்கவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கலந்து கொள்ளும் முன் கோவிட்-19 பிணிப்பாய்வு சோதனைக்கு உட்பட வேண்டும். இது மே 14 அல்லது 15 ஆம் தேதிகளில் மேற்கொள்ளப்படும். சோதனை, காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நாடாளுமன்ற கட்டிட வளாகத்தில் நடைபெறும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு தனி மருத்துவமனை அல்லது மருத்துவ மையத்தில் சோதனைக்கு செல்ல விரும்பினால், பிரதிநிதிகள் தங்கள் மருத்துவரிடமிருந்து உறுதி கடிதத்தைப் பெற வேண்டும்.

கோவிட்-19  பரிசோதனை மேற்கொள்ளத் தவறிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.கோலாலம்பூரிலிருந்து திரும்பும்போது, சபா மற்றும் சரவாக் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 14 நாள் தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கப்பட, சபாநாயகர் அலுவலகம் சுகாதார அமைச்சகத்துடன் இணைந்து செயல்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


Pengarang :