Aktiviti perniagaan oleh penjaja haram di sekitar Tesco Pelangi Semenyih, Kajang menyebabkan laluan itu sesak dengan kenderaan pelanggan yang berhenti di bahu jalan. Foto ihsan Facebook MPKj
PBTSELANGOR

அனுமதியில்லாத வணிக நடவடிக்கைகள்; 40 வணிகர்களுக்கு மூடும்படி கட்டளை- எம்பிகெஜே

ஷா ஆலம், ஜூன் 8:

செமினி பெலாங்கி டெஸ்கோ பேரங்காடியை சுற்றி 40 சட்டவிரோத வணிகர்களை தங்களின் வணிகத்தை தொடர்வதை நிறுத்துமாறு காஜாங் நகராண்மை கழகம்  (எம்பிகேஜே) உத்தரவிட்டுள்ளது.கடந்த  ஜூன் 5-ஆம் தேதி எம்பிகெஜேவின் உரிமம் மற்றும் வணிகர் இலாகா அதிகாரிகள் நடவடிக்கையில் ஈடுபட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அதன் மக்கள் தொடர்பு அதிகாரி கமாருல் இஸ்லான் சுலைமான் தெரிவித்தார்.

” எம்பிகேஜெ இடமிருந்து சரியான அனுமதி இல்லாததைத் தவிர, சாலையில் நிறுத்தப்பட்ட வாடிக்கையாளர் வாகனங்கள் அதிகமாக நிறைந்திருந்தன. உண்மையில், அவை இங்குள்ள பகுதியை அழுக்காக மாற்றியுள்ளது. வணிகம் முடிந்தபின் தளவாடங்களை விட்டு செல்வது இதில் அடங்கும்,” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

” இங்கு 10 வணிகர்கள் மட்டுமே இப்பகுதியில் வணிகத்தை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். ஆனாலும்,  சீரான செயலாக்க நடைமுறைகளை (எஸ்ஓபி) கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் இப்பகுதியை சுத்தம் செய்யவும், வியாபாரத்தை விட்டு வெளியேறும் போது வணிக தளவாடங்களை எடுத்துச் செல்ல வேண்டும். அப்படி பின்பற்றத் தவறினால் உடனடியாக வியாபார அனுமதி திரும்பப் பெற முடியும்,” என்று அவர் கூறினார்.


Pengarang :