V. Ganabatirau bersama penerima pada majlis penyerahan Program Kewangan Bantuan Khas kepada Penerima Bantuan Blueprint Pembasmian Kemiskinan di Bawah Pakej Rangsangan Ekonomi Selangor Prihatin Fasa 2 Tahun 2020 di Bangunan SUK, Shah Alam pada 29 Jun 2020. Foto ASRI SAPFIE/SELANGORKINI
RENCANA PILIHANSELANGOR

வறுமை ஒழிப்பு புளூபிரிண்ட் திட்டத்தில் 1072 வணிகர்கள் பலன் அடைந்தனர் !!!

ஷா ஆலம், ஜூன் 29:

கோவிட்-19 தொற்று நோய் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட 1072 வணிகர்களுக்கு ரிம 430,000-ஐ சிலாங்கூர் மாநில அரசாங்கம்  ஒதுக்கீடு செய்துள்ளது. சிலாங்கூர் மாநில பொருளாதார ஊக்குவிப்பு 2.0 திட்டத்தின் வழி ஒவ்வொருவருக்கும் தலா ரிம 400-ஐ மாவட்ட மற்றும் நில அலுவலகத்தின் மூலமாக வழங்கப்படும் என பரிவுமிக்க அரசாங்க ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு கணபதி ராவ் தெரிவித்தார்.

” பிகேபி காலகட்டத்தில் ரிம 400 உதவி நிதி சிறு வணிகர்களுக்கு தங்களது வியாபாரத்தை மீண்டும் தொடங்க உறுதுணையாக இருக்கும். இருந்தாலும், இந்த வணிகர்கள் சுகாதார அமைச்சு, தேசிய பாதுகாப்பு மன்றம் (எம்கெஎன்) மற்றும் ஊராட்சி மன்றங்கள் ஆகியவற்றின் விதிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும் என்று மாநில அரசாங்கம் நினைவு படுத்தி உள்ளது,” என்று சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது இவ்வாறு கணபதி ராவ் பேசினார்.

 


Pengarang :