PBTSELANGOR

எம்பிஎஸ்ஏ: வணிக வளாகங்களை அந்நியர்களுக்கு வியாபாரம் செய்ய வாய்ப்பு அளிக்க வேண்டாம்

ஷா ஆலம், ஜூலை 8:

வணிக வளாக உரிமையாளர்கள் அந்நிய நாட்டவர்களுக்கு தங்களது கடைகளை வணிகம் செய்ய அனுமதி அளிக்கக்கூடாது என ஷா ஆலம் மாநகராட்சி மன்றம் (எம்பிஎஸ்ஏ) எச்சரிக்கை விடுத்துள்ளது. அமலாக்க அதிகாரிகள் சோதனைகளை நடத்தும் போது கடைகளின் உரிமையாளர்கள் இல்லாமல் அந்நிய நாட்டவர்கள் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டால் எம்பிஎஸ்ஏவின் விதிமுறைகளை மீறியதாக அர்த்தம் என தொழில்முறை மற்றும் பொதுத் தொடர்பு பிரிவு தலைவர் ஷாரின் அமாட் தெரிவித்தார்.

” கடை உரிமையாளர்கள் மேற்கண்ட விதிமுறைகளை மீறியிருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று தமது அறிக்கையில் அவர் கூறினார்.

நேற்று செக்சன் 7, ஷா ஆலம் வணிக வளாகங்கள் மீது திடிர் சோதனை செய்யப்பட்ட போது அந்நிய நாட்டவர்கள் வியாபாரத்தில் சட்ட விரோதமாக ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் கடைகளின் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் மின்னியல் தளவாடங்கள், உணவு பொருட்கள் மற்றும் எரிவாயு சிலிண்டர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டவை ஆகும் என்று ஷாரின் அமாட் குறிப்பிட்டார்.


Pengarang :