PUTRAJAYA, 24 Jun — Para pelajar memulakan sesi persekolahan kali ini dalam suasana patuh Garis Panduan Pengurusan Pembukaan Semula Sekolah yang ditetapkan Kementerian Pendidikan Malaysia semasa di Sekolah Menengah Kebangsaan Putrajaya Presint 8 (1) hari ini. –fotoBERNAMA (2020) HAK CIPTA TERPELIHARA
NATIONAL

கோவிட்-19: நோய் தொற்று அதிகரித்தாலும், பள்ளித் தவணை தொடரும்- இஸ்மாயில் சப்ரி

கோலா லம்பூர், ஜூலை 21:

கோவிட்-19 நோய்த் தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருந்தாலும், பள்ளி தவணையை ஒத்திவைப்பதற்கான எந்தவோர் எண்ணத்தையும் அரசாங்கம் கொண்டிருக்கவில்லை. இதற்கு முன்னர் முடிவு செய்யப்பட்டிருப்பது போலவே, பள்ளி தவணை தொடரப்படும் என்று மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.

” ஏற்கனவே முடிவு செய்த படியே பள்ளி தவணை தொடரப்படும். எனினும், பள்ளிகளிலோ அல்லது ஏதேனும் துறைகளிலோ புதிய நோய்த் தொற்றுச் சம்பவம் கண்டுப்பிடிக்கப்பட்டால், அதன் பிறகே அது குறித்த முடிவெடுக்கப்படும்,” என்று நாடாளுமன்றத்தில் இன்று நடைப்பெற்ற பி.கே.பி.பி (PKPP) குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறினார்.

கடந்த ஜுலை 15-ஆம் தேதி, முதலாம் படிவம் தொடங்கி 4-ஆம் படிவ மாணவர்களுக்கான பள்ளி தவணையும், 5 மற்றும் 6-ஆம் ஆண்டு மாணவர்களுக்கான பள்ளி தவணையும் தொடக்கம் கண்டிருந்த வேளையில், முதலாம் ஆண்டிலிருந்து 4-ஆம் ஆண்டு மாணவர்கள் நாளை தொடங்கி பள்ளிச் செல்லவிருக்கிறார்கள். இந்நிலையில், அவர்கள் அனைவரும் நிர்ணயிக்கப்பட்ட செயல்பாட்டு தர விதிமுறையான எஸ்.ஓ.பி-யை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.


Pengarang :