A computer image created by Nexu Science Communication together with Trinity College in Dublin, shows a model structurally representative of a betacoronavirus which is the type of virus linked to COVID-19, better known as the coronavirus linked to the Wuhan outbreak, shared with Reuters on February 18, 2020. NEXU Science Communication/via REUTERS
NATIONAL

கோவிட்-19: இன்று 13 புதிய சம்பவங்கள் மற்றும் ஒரு மரணம் பதிவு செய்யப்பட்டுள்ளது

புத்ராஜெயா, ஜூலை 26:

நம் நாட்டில் இன்று வரை கொவிட்-19 நோயால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 8,897 ஆக உயர்ந்துள்ளது. இன்று புதியதாக 13 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இதில் 10 உள்நாட்டு சம்பவங்கள் ஆகும். இன்று ஒரு  மரணம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இதுவரையிலான மரண எண்ணிக்கை 124-ஆக உயர்ந்துள்ளது என சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா விளக்கினார்.

இன்றைய  நிலையில் 2 பேர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டிருக்கின்றனர். அதில் ஒருவர் சுவாசிக்க கருவி உதவியை பெறுகிறார். மேலும், இன்று 6 பேர்கள் சிகிச்சையிலிருந்து குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். இதைத் தொடர்ந்து இதுவரையில் கொவிட்-19 பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8,600 உயர்ந்திருக்கிறது. ஆசியான் வட்டாரத்திலே மிக அதிகமாக குணமடைந்தவர்கள் அதாவது 96.7 % இன்று பதிவு செய்யப்பட்டுள்ளது என்று நூர் ஹிஸாம் கூறினார்.


Pengarang :