ECONOMYSELANGOR

தயாரிப்பு துறையில் வெ. 1,700 கோடி முதலீட்டுக்கு சிலாங்கூர் அனுமதி

ரவாங், அக் 9- கடந்தாண்டில் 1,700  கோடி வெள்ளி மதிப்பிலான தயாரிப்பு துறை சார்ந்த முதலீட்டுகளுக்கு சிலாங்கூர் அரசு அனுமதி அளித்துள்ளது.

315 திட்டங்களை உள்ளடக்கிய இந்த முதலீட்டின் வாயிலாக 21,085 வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டதாக இன்வெஸ்ட் சிலாங்கூர் நிறுவனத்தின் தலைமை செயல் முறை 
அதிகாரி டத்தோ அசான் அஸாரி கூறினார்.

உள்நாட்டு, வெளிநாட்டு முதலீடுகள்தான் சிலாங்கூரின் வெற்றிக்கான அடித்தளமாக விளங்குகிறது. இது மாநில மக்களின் வேலை வாய்ப்புக்கும் உத்தரவாதம் தருகிறது 
என்றார் அவர்.

இன்று இங்கு நடைபெற்ற டைகின் மலேசியா நிறுவனத்தின் ஒருங்கிணைந்த விநியோக மையத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் கூறினர்.

மேலும் அதிகமான முதலீட்டாளர்களை கவர்வதற்கும் சிலாங்கூர் சிறந்த முதலீட்டு 
மையம் என்ற நம்பிக்கையை முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Pengarang :