ECONOMYNATIONALSELANGOR

பெட்ரோல் விலை லிட்டருக்கு நான்கு காசு குறைந்தது

கோலாலம்பூர், அக் 9-  ரோன் 95 மற்றும் ரோன் 97 பெட்ரோலின் சில்லறை விலை முறையே லிட்டருக்கு நான்கு காசு குறைந்துள்ளது. டீசல் விலை லிட்டருக்கு ஒரு காசு குறைக்கப்பட்டுள்ளது.

இந்த விலை குறைப்பு நாளை 10 ஆம் தேதி தொடங்கி வரும் 16 ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.

இதன் வழி ரோன் 95 பெட்ரோல் விலை லிட்டருக்கு வெ. 1.67 ஆகவும் ரோன் 97 பெட்ரோல் விலை வெ. 1.97 ஆகவும் டீசல் விலை லிட்டருக்கு வெ. 1.69 ஆகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளாக நிதியமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

Pengarang :