EVENTSELANGOR

கடல் பெருக்கு அபாயம்- கடலோரப் பகுதிகளைத் தவிர்ப்பீர் மந்திரி புசார் அறிவுறுத்து

ஷா ஆலம், அக் 16- பெரிய அளவில் கடல் பெருக்கு ஏற்படும் அபாயம் காரணமாக  வரும் சனிக்கிழமை முதல் திங்கட்கிழமை கடலோரப் பகுதிகளில் எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம் என  ஐந்து மாவட்டங்களை சேர்ந்த மக்களை சிலாங்கூர் மந்திரி புசார்  டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக் கொணடுள்ளார்.

இந்த கடல் பெருக்கின் போது கடல் நீர் கரைகளைக் கடக்கும் சாத்தியம் உள்ளதால் கடலோரங்களில் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதாக அவர் சொன்னார்.

இந்த கடல் பெருக்கு காரணமாக சிப்பாங், கோல லங்காட், கிள்ளான், கோல சிலாங்கூர், சபாக் பெர்ணம் ஆகிய மாவட்டங்களில் 5.8 மீட்டர் உயரம் வரை அலைகள் எழுவதற்கான சாத்தியம் உள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்வதை தவிர்ப்பதற்காக அந்த ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதோடு கடலோர நடவடிக்கைகளையும் தவிர்க்க வேண்டும் என்றார் அவர்.

அக்கடல் பெருக்கு இம்மாதம் 17ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை அதிகாலை 6.00 தொடங்கி காலை 7.30 மணி வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

.

 


Pengarang :