NI
NATIONALSELANGOR

கோவிட் 19க்கு எதிரான போராட்டத்தில் போலீசார் மற்றும் சிறை வார்டன்- முன்னணி சேவையாளர்கள் அதிகம் பாதிப்பு

ஷா ஆலம்- அக் 18;-  கோவிட் 19 நோய்த்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் போலீசார் மற்றும் சிறை வார்டன் போன்ற முன்னணி சேவையாளர்களும் அதிகம் பாதிக்கப் படாமலிருக்கப் போதுமான சுவாசக் கவசங்களும், கிருமி நாசினி போன்ற இதர தேவைகளைப் பூர்த்தி செய்வதின் வழி, அவர்கள் குடும்பத்தினர் மற்றும் சுற்றத்தினரைப் பாதுகாக்கும் அம்சங்களுக்கும் அரசாங்கம்  அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டும் எனக் கெஅடிலான் கட்சியின் தேசியத் தலைவருமான டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்  அறைகூவல் விட்டார்.

போலீசார் மற்றும் சிறை வார்டன் போன்ற முன்னணி சேவையாளர்களுக்கு இது போன்ற அடிப்படை சுகாதார  உபகரணங்கள்  போதுமான  அளவில் விநியோகிக்கப் படுவதை உறுதி செய்ய உள்துறை அமைச்சு தவறுவதன் வழி முன்னணி சேவையாளர்களின் நலத்தை மட்டுமன்றி அவர் குடும்பத்தினர்  சேமத்தையும் பலியிடுவது  வருந்தத்தக்கது. அவர்களின் அந்த நிலைக்குப் பரிதாபப் படுகிறேன் என்றார் அவர்.

மலாய் மெயில் வலைத்தளச் செய்தியில் 2688 போலீஸ் வீரர்கள் கோரண்டின் எனும் தனிமைப்படுத்தலில் இருப்பதாகச் செய்தி வெளியிட்டுள்ளது மீது தனது ஆதங்கத்தை வெளியிட்ட போர்டிக்சன் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒரு பொறுப்புள்ள அரசாங்கம் முன்னணி சேவையாளர்களின் சுகாதாரப் பாதுகாப்பை என்றும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அவர்கள் நாட்டின் நுழைவாயிலை மட்டும் காப்பவர்கள் அல்ல, அவர்களே நாட்டு பாதுகாப்புக்கும் பொறுப்பானவர்கள் என்பதைக்  கவனத்தில் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மழை வெயில் இரவு பகலெனப் பாராமல் கோவிட் 19 நோய் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் இருக்கும் அவர்கள் மிக எளிதில் கோவிட் 19 நோய் தொற்றுக்கு இலக்காகும் சூழல் அதிகமாகும்.

பல அதிகாரிகள் அவர்களின் நிலையை என்னிடம் தனிப்பட்டமுறையில் எடுத்துரைப் பதைக்  கவனித்தால்  அவர்களின் நிலை மிக மோசமாக உள்ளதை உணர்த்துகிறது என்றார் அவர்.

நேற்று வெள்ளிக்கிழமை அவருக்கு எதிரான போலீஸ் புகார்கள் மீது விசாரணை நடத்த போலீசார் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமை கோலாலம்பூர் புக்கிட்  அமான் போலீஸ் தலைமையகத்திற்கு அழைத்திருந்ததை  அனைவரும்  அறிவோம்.


Pengarang :