NATIONALSELANGOR

தலைவர்கள் அரசியல் இழுபறியை நிறுத்தி மக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் – சுல்தான் அறிவுறுத்து

 ஷா ஆலம், அக் 20- கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டு பெரும் சிரமத்தை எதிர் நோக்கியிருக்கும் பொது மக்களை பற்றி தலைவர்கள் சிறிதும் கவலைப்படாதது குறித்து சுல்தான் மிகவும் வருத்தம் அடைந்துள்ளதாக சுல்தானின் தனிச் செயலாளர் டத்தோ லீலா பக்தி முகமது முனீர் பானி கூறினார்.

நாட்டின் அரசியல் தலைமைத்துவத்தைக் கைப்பற்றுவதற்காக சதா மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் தலைவர்களின் போக்கை கண்டு மக்கள் வெறுப்பும் சலிப்பும் அடைந்து விட்டனர் என்று அரண்மனையின் அதிகாரபூர்வ முகநூல் வெளியிடப்பட்ட அறிக்கையில் அவர் தெரிவித்தார்.

மக்களின் சிரமங்களை களைவதில் தலைவர்கள் எப்போதும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதோடு  திடமான மற்றும் தீர்க்கமான நடவடிக்கைகள் வாயிலாக அப்பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கோவிட்-19 நோய்த் தொற்று பிரச்சனையிலிருந்து மக்களையும் நாட்டையும் காப்பாற்ற தலைவர்கள் கட்சி வேறுபாடின்றி ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். அதேசமயம் மோசமாக பாதிக்கப்பட்ட நாட்டின் பொருளாதாரத்தை மீட்கவும் பாடுபட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :