PBTSELANGORSUKANKINI

ஷா ஆலம் விளையாட்டரங்க வளாகம் வெ. 800 கோடி செலவில் மேம்படுத்தப்படும்

ஷா ஆலம், அக் 31- இளையோர் மற்றும் விளையாட்டு நகர் மேம்பாட்டுத் திட்டத்தின் வாயிலாக ஷா ஆலம் ஸ்டேடியம் எனப்படும் ஷா ஆலம் விளையாட்டரங்கிற்கு புதுப் பொலிவு ஏற்படுத்தப்படும்.

சுமார் 800 கோடி வெள்ளி மதிப்பிலான இத்திட்டம் தனியார் விவேக பங்காளித்துவ அடிப்படையில் மேம்படுத்தப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தவிர்த்து நீண்ட நாட்களாக பராமரிப்பின்றி காணப்படும் அப்பகுதிக்கு புதுப் பொலிவை ஏற்படுத்துவதும் இத்திட்டத்தின் நோக்கமாகும் என்றார் அவர்.

மாநில சட்டமன்றத்தில் 2021ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது அவர் இதனைத் தெரிவித்தார்.


Pengarang :