அந்தப் பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தி அத்திவாசிய பொருட்களை வாங்கிய சிலருடன் சட்டமன்ற உறுப்பினர் படத்தில் காணப்படுகிறார்.
ECONOMYSELANGOR

பரிவுமிக்க சிலாங்கூர் திட்டங்கள் வாயிலாக 30 லட்சம் பேர் பயன் பெற்றனர்

ஷா ஆலம், 1– கோவிட்-19 நோய் தொற்றை எதிர்கொள்ளும் விதமாக பரிவுமிக்க சிலாங்கூர் திட்டத்தின் முதலாவது மற்றும் இரண்டாவது கட்டங்களில் அறிவிக்கப்பட்ட 43 திட்டங்களில் 40 திட்டங்கள் வெற்றிகரமாக அமலாக்கம் கண்டதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இத்திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 40 கோடி வெள்ளியில் 26 கோடியே 44 லட்சம் வெள்ளி அதாவது 64 விழுக்காடு செலவு செய்யப்பட்ட வேளையில் அதன் வாயிலாக முப்பது லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயன் பெற்றனர் என்று சட்டமன்றத்தில் 2021ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது அவர் சொன்னார்.

கோவிட்-19 நோய்த் தொற்றை தடுப்பது மற்றும் அதனால் ஏற்பட்ட சமூக பொருளாதாரபாதிப்பிலிருந்து மீட்சி பெறுவது ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் பரிவுமிக்க சிலாங்கூர் உதவித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது என்றார் அவர்.

 


Pengarang :