ECONOMYNATIONALSELANGOR

சிலாங்கூர் அரசில் முடிவெடுக்கும் அதிகாரத்தில் 32 விழுக்காட்டுப் பெண்கள்- சட்டமன்றத்தில் தகவல்

ஷா ஆலம், நவ 2- சிலாங்கூர் மாநிலத்தில் நிர்வாக அடிப்படையில் முடிவெடுக்கும் அதிகாரத்தில் உள்ளவர்களில்  32.9 விழுக்காட்டினர் பெண்கள் என்று மகளிர் மற்றும் குடும்ப மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.

துறைத் தலைவர்கள் மற்றும் கிரேட் 48 மற்றும் அதற்கும் மேற்பட்ட தகுதியுடையவர்களை உள்ளடக்கிய  132 பெண் அதிகாரிகள் மாநில அரசில் உள்ளதாக அவர் சொன்னார்.

கடந்த அக்டோபர் 13ஆம் தேதி வரை மாநில அரசில் முடிவெடுக்கும் அதிகாரத்தில் 401 அதிகாரிகள் உள்ளனர். அவர்களில் 269 பேர் ஆண்கள். எஞ்சிய 132 பேர் பெண்களாவர் என்றார் அவர்.

மாநில சட்டமன்றத்தில் இன்று புக்கிட் மெலாவத்தி சட்டமன்ற உறுப்பினர் ஜூவாரியா ஜூல்கிப்ளி எழுப்பிய எழுத்துப் பூர்வ கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.

மாநில ஆட்சிக்குழுவில்  30 விழுக்காட்டு பெண்களை உள்ளடக்கிய ஒரே மாநிலமாக சிலாங்கூர் விளங்குவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்தாண்டு மார்ச் மாதம் கூறியிருந்தார்.


Pengarang :