EKSKLUSIFSELANGOR

நீரில் துர்நாற்றத்தை அகற்ற நானோ தொழில்நுட்பம்- மந்திரி புசார் தகவல்

ஷா ஆலம், நவ 4- சிலாங்கூர் மாநிலத்தில் சுத்திகரிக்கப்படாத நீரில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்குவதற்கு  நானோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இந்த தொழில்நுட்பத்தின் வழி மாசடைந்த  பகுதிகளில் கலக்கப்படும் சில சிறப்பு சேர்மானங்கள் நீரில் கலந்துள்ள துர்நாற்றத்தை அகற்றி நீர் தூய்மைக் கேட்டிலிருந்து முற்றாக விடுபடும் என்று அவர் சொன்னார்.

கடந்த 2009, 2010 மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் நீர் சுத்திகரிப்பு மையங்களின் பற்றாக்குறையை நாம் எதிர்நோக்கினோம். சக்திக்கு மீறி செயல்பட்டதால் அவை அடிக்கடி பழுதடைந்தன. 2012 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் வறட்சி காரணமாக நீர் பற்றாக்குறையை எதிர்நோக்கினோம்.

இப்போது ஹோராஸ் முறையைப் பயன்படுத்தி சுத்திகரிக்கப்படாத நீர் பற்றாகுறைப் பிரச்னைக்கு தீர்வு கண்டுள்ளோம். ஆனால் தற்போது நீர் தூய்மைக் கேட்டுப் பிரச்னை அடிக்கடி எழுகிறது. ஆகவே இப்பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டி கட்டாயத்தில் உள்ளோம் என்றார் அவர்.

இப்பிரச்னைகளைக் களைவதற்கு சுத்திகரிப்பு மையங்களைத் தரம் உயர்த்துவது, லபோஹான் டாகாங் நீர் சுத்திகரிப்பு மையத்தை நிர்மாணிப்பது மற்றும் சுங்கை ராசாவ் மற்றும் லங்காட் 2 சுத்திகரிப்பு மைய நிர்மாணிப்பு மீது கவனம் செலுத்துவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன எனவும் அவர் சொன்னார்.

மாசடைந்த நீர் சுத்திகரிப்பு மையங்களுக்குள் நுழையாமல் எவ்வாறு தடுப்பது மற்றும் மாசுபாடு காணப்பட்ட போதிலும் நீரை எவ்வாறு சுத்திகரிப்பது என்பது போன்ற பிரச்னைகள் மீது தற்போது கவனம் செலுத்தப்பட்டு வருகிறது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

அடுத்த 18 மாதங்களில் பூர்த்தியாகவிருக்கும் நான்கு திட்டங்களின் வாயிலாக நீர் மாசுபாடு பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு ஏதுவாக கடந்த வெள்ளிக்கிழமை சட்டமன்றத்தில் தாக்கல் செய்த வரவு செலவுத் திட்டத்தில்  மந்திரி புசார்  20 கோடி வெள்ளி ஒதுக்கீட்டை அறிவித்தார்.


Pengarang :