ECONOMYPBTSELANGOR

சாலாக் திங்கி  மேடான் 88 குடியிருப்பைச் சேர்ந்த 324 பேரிடம் கோவிட்-19  சோதனை

ஷா அலாம் 16நவ;- சிலாங்கூர் சிப்பாங் சாலாக் திங்கியிலுள்ள  மேடான் 88 குடியிருப்பு மீது PKPD என்னும் கட்டுப்படுத்தப்பட்ட நடமாட்டு கட்டுப்பாடு ஆணை விதிக்கப் பட்டுள்ளது. இன்று காலை வரை அக்குடியிருப்பைச் சேர்ந்த 800 பேர்களில் 324 பேரிடம் கோவிட் 19 நோய்க்கான சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அங்கு வாழும் மக்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதாகவும், அவர்களை நோய்க்கு எதிராக  நடமாட்டு கட்டுப்பாடு ஆணை விதிகளைப் பின் பற்றி நடக்கவும் அமைதியாக இருக்கவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகச் சிப்பாங் வட்டாரத் தொற்றுநோய் தடுப்பு சிறப்பு குழுத் தலைவர் கூறினர்.

அங்கு வாழ் மக்களின் மன ஆரோக்கியமும் அணுக்கமாகக் கவனித்து வரப்படுவதாகவும், கட்டுப்படுத்தப்பட்ட நடமாட்டு கட்டுப்பாடு ஆணைக் காலத்தில் அங்குள்ள மக்களுக்குத் தேவையான  உணவு ஏற்பாடுகளைச் சம்பந்தப்பட்ட இலாக்காக்கள் கவனித்துக்கொள்ள வேண்டும் என்று முகமட் ஷின் அமிட் சிலாங்கூர் இன்றுவிடம் கூறினார்.

வெளியிலிருந்து வந்து அங்குத் தொழில் புரிபவர்களும் கவனத்தில் கொள்ளப்படுகிறார்கள், எல்லா வேளையிலும் கோவிட் 19 நோய்த்தொற்றுக்கு எதிரான போராட்டத்திலும் அணைவரும் வெற்றிப்பெரும் வண்ணம்  முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.


Pengarang :